2,681 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

2,681 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Update: 2022-07-07 13:31 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. 12 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு 84 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.4 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுபோல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு 87.4 சதவீதம் முதல் தவணையும், 73.5 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 98.5 சதவீதம் முதல் தவணையும், 76.2 சதவீதம் இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறப்பு தடுப்பூசி முகாம் வருகிற 10-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உ காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த 5,362 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தேவையான மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்