நட்பை வலுப்படுத்தும் ஒரு நல்லெண்ண பயணம்: கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வந்தன

நட்பை வலுப்படுத்தும் ஒரு நல்லெண்ண பயணமாக கொரியாவின் 2 கடற்படை கப்பல்களில் 470 வீரர்கள் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.

Update: 2022-09-28 15:58 GMT

சென்னை:

இந்தியாவுடன் நட்பை மேம்படுத்த, தென் கொரியாவின், ஆர்.ஒ.கே.எஸ்., ஹன்சாண்டோ மற்றும் ஆர்.ஒ.கே.எஸ்., டேச்சியோங் ஆகிய இரு கடற்படை கப்பல்களில் 470 வீரர்கள் சென்னை துறைமுகத்திற்கு நேற்று வந்தன. ரியர் அட்மிரல் காங் தலைமையிலான கொரிய கடற்படை வீரர்களை இந்திய கடற்படை அதிகாரிநட்பை வலுப்படுத்தும் ஒரு நல்லெண்ண பயணமாக கொரியாவின் 2 கடற்படை கப்பல்களில் 470 வீரர்கள் சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.கள் வரவேற்றனர்.

பின்னர் ரியர் அட்மிரல் காங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென் கொரிய கடற்படை கப்பல்கள் 110 நாட்கள் நீண்ட பயணத்தை கடந்த 2-ந்தேதி தொடங்கி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சுற்றியுள்ள வியட்நாம், மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ள 10 துறைமுகங்களுக்கு செல்ல திட்டமிட்டு சென்னைக்கு வருகை தந்துள்ளோம். அத்துடன் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் வருகை தந்துள்ள வீரர்கள் கொரியா கடற்படை அகடாமியை சேர்ந்தவர்கள். இந்த பயணத்தின் மூலம் நாடுகளுடன் நல் உறவுகளை வலுப்படுத்தவும் பரஸ்பரத்தை மேம்படுத்தவும் உதவும் என்று நினைக்கிறோம்.

கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு வருகை தந்தோம்.1975-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை இந்தியாவுக்கு வருவது இது 16- வது முறையாகும். தற்போது 'டோங்-கூ கொரிய' 4-வது ஆண்டிற்கான கடற்படை வீரர்களுக்கான பயிற்சி திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த கப்பல்களில் வந்துள்ள கொரியா கடற்படை வீரர்கள் வருகிற 1-ந்தேதி வரை சென்னையில் தங்கி இருக்கின்றனர். நாளை சென்னையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். மதியம் தமிழ்நாட்டிலுள்ள இந்திய கடற்படையின் கமாடோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறோம்.

குறிப்பாக சென்னையில் வசிக்கும் கொரியா நாட்டு மக்களுடன் இணைந்து மெரினா கடற்கரையில் சுத்தம் செய்வதுடன், விழிப்புணர்வு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து இந்திய கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த இருக்கிறோம்.

நிகழ்ச்சிகளில் உள்ளூர் இந்திய பங்கேற்பாளர்களுடன் கொரிய கடற்படை வீரர்கள் பிராஸ் இசைக்குழு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அத்துடன், இந்திய பார்வையாளர்களுக்கு கொரிய கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்தி காண்பிக்கின்றனர். இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்