திருச்செங்கோடு
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 155 கொப்பரை தேங்காய் மூட்டைகள் வரத்து வந்தது. முதல் தரம் கிலோ ரூ.73 முதல் ரூ.84 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.66 முதல் ரூ.72 வரையிலும் விலை போனது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த வியாரிகள் கொப்பரை தேங்காயை ஏலம் எடுத்து சென்றனர். மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.