மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

கணபதிபுரம் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது.

Update: 2023-05-07 17:52 GMT

நெமிலியை அடுத்த கணபதிபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனையும் செய்யப்பட்டது. பின்பு மதியம் பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு கூழ்வார்த்து நேர்த்திக்கடன் செய்தனர்.

இதில் குழந்தை வரம் வேண்டி வேப்பிலையில் சேலை அணிந்து பெண்கள் ஊர்வலம் வந்தனர். இதைதொடர்ந்து மாரியம்மன் பூங்கரகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது. வீடுதோறும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்