கோனேரிப்பட்டி கதவணை பராமரிப்பு பணி:தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் பாறைகளாக காட்சி அளிக்கும் காவிரி ஆறு

கோனேரிப்பட்டி கதவணை பராமரிப்பு பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறு பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.

Update: 2023-04-19 21:33 GMT

கோனேரிப்பட்டி கதவணை பராமரிப்பு பணிக்காக காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறு பாறை திட்டுகளாக காட்சி அளிக்கிறது.

மின் உற்பத்தி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் தேக்க நிலைய கதவனை பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது. இதில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகள் ஆண்டுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு நீர்மின் தேக்க கதவணைகளிலும் தலா 15 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் 2 எந்திரங்கள் மூலம் 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரியில் வரும் தண்ணீரின் வரத்துக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

பராமரிப்பு பணிகள்

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, மாதங்களில் நீர்மின் தேக்க கதவணை பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க கதவணையில் மதகுகள் திறந்து விடப்பட்டு தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தற்போது கோனேரிப்பட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் இன்னும் 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

பாறை திட்டுகளாக காட்சி

தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கதவணை நீர்த்தேக்கத்தில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கோனேரிப்பட்டி நீர் மின் தேக்க பகுதிகளான கோனேரிப்பட்டி படித்துறை, ஆனந்தம்பாளையம், சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடல் போல் தேங்கி இருந்த காவிரி ஆறு தண்ணீர் வடிந்து பாறை திட்டுகளாக காட்சியளிக்கிறது. இதனால் அதிகளவில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்