கொந்தகை அகழாய்வு; முதுமக்கள் தாழியில் இருந்து 20 பொருட்கள் கண்டெடுப்பு

முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் டி.என்.ஏ. பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.;

Update: 2022-09-17 00:06 GMT

சிவகங்கை,

சிவாகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 134 முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன. இதில் 116, 123 ஆகிய எண்களைக் கொண்ட முதுமக்கள் தாழிகளை ஆய்வாளர்கள் திறந்தனர்.

அந்த தாழிகளில் மனித மண்டை ஓடு, எலும்புகள், சிறிய பானைகள், கிண்ணங்கள், முன்னோர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் ஆகியவை இருந்தன. இந்த பொருட்கள் டி.என்.ஏ. பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைக்கும் போது, மேலும் பல்வேறு விவரங்கள் தெரிய வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்