பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-03-30 11:58 GMT

பெருமாநல்லூர்

பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொண்டத்துகாளியம்மன் கோவில்

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ேகாவில் குண்டம் திருவிழா ஒவ்ெவாரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழாவையொட்டி கடந்த 24-ந் தேதி முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தியும், அதைத்தொடர்ந்து சிறப்பு யாகம், கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கொடிமரம், கொடிக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று அதிகாலை 1 மணிக்கு கொடி கோவில் வளாகத்தை சுற்றி வந்த பின்பு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கொடிக்கு சிறப்பு தீபாராதனை, காப்புகட்டுதல் வழிபாடு அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

குண்டம் இறங்குதல்

விழாவை தொடர்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வருகிற 2-ந் தேதி மஞ்சள் நீர் மற்றும் பொங்கல் வைத்தலும், 3-ந் தேதி குண்டம் திறந்து பூ போடுதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் 4-ந் அதிகாலை 4 மணிக்கும், அன்று மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது.

இதனை அடுத்து 8-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவுபெறுகிறது. கொடியேற்று விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்