கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதி

கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

Update: 2023-09-30 07:49 GMT

ஈரோடு கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதி, கல்யாணசுந்தரம் வீதி உள்பட பல்வேறு பகுதியில் நேற்று முழுமையாக மின்தடை செய்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தினமும் 10 முதல், 15 முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டு, அங்குள்ள வீடுகள், கட்டிடங்களில் உள்ள மின் சாதனங்கள் கடுமையாக பாதித்து வந்தன. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின் கசிவு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை மின் ஊழியர்கள் அந்த டிரான்ஸ்பார்மரை கழற்றி எடுத்து சென்றுவிட்டனர். அதற்கு பதிலாக வேறு டிரான்ஸ்பார்மர் அமைக்காததால் அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் நேற்று காலை முதல் மின்சாரம் இன்றி அவதி அடைந்தனர்.

ஈரோடு மாநகர பகுதியில் மாதம் ஒரு முறை முழுமையாகவும், பல முறை பகுதி பகுதியாகவும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்தாலும், கடந்த சில மாதங்களாக அதிக அளவில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்