கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நிற்பது இல்லை

அனைத்து கட்சி போராட்டத்திற்கு பின்னரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நிற்பது இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-05 20:18 GMT

சிவகாசி, 

அனைத்து கட்சி போராட்டத்திற்கு பின்னரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நிற்பது இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்

சென்னையில் இருந்து தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 1 மணிக்கு சிவகாசியை கடந்து செல்கிறது. ஆனால் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் சிவகாசி ரெயில் பயணிகள் பெரிதும் அவதி அடைகிறார்கள்.

இங்குள்ள தொழில்கள் மூலம் ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய்கள் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வரும் நிலையில் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ரெயில்வே நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்ல எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவகாசி மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இந்த ரெயிலை தொடர்ந்து சிவகாசியில் நின்று செல்ல தேவையான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும்.

போராட்டம்

இந்த கோரிக்கையை முன் வைத்து மாணிக்கம் தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் சிவகாசி ரெயில்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னரும் இந்த ரெயிலை சிவகாசியில் நிறுத்த தேவையான நடவடிக்கையை தென்னக ரெயில்வே அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே கொல்லம் ரெயிலை சிவகாசியில் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்