ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் அருகே உள்ள அமராவதி புதூரில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஆடு, மாடு, எருமை போன்ற கால்நடைகளுக்கும், கோழிக்கும் நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கம், செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை செய்தல், தாது உப்புக்கலவை வழங்குதல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.
முகாமில் கொம்பனை புதூர் அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர் விஜயகுமார், வெள்ளோட்டாம்பரப்பு கால்நடை டாக்டர் கண்ணன், கால்நடை ஆய்வாளர் சண்பகம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிசிச்சை அளித்தனர்.