கோவில்பட்டி யூனியன் கூட்டம்

கோவில்பட்டி யூனியன் கூட்டம் நடந்தது.

Update: 2023-04-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி யூனியன் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் ராஜேஷ்குமார், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் 15 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 80 தீர்மானங்கள் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு, அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி யூனியனில் 16 பஞ்சாயத்துகளில் பேவர் பிளாக் சாலை, வாறுகால், தடுப்புச் சுவர், சிறிய பாலம் உள்பட 24 பணிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சத்து 66 ஆயிரமும், 10 பஞ்சாயத்துகளில் உள்ள பழைய தொடக்கப்பள்ளி கட்டிடங்கள், சமையல் அறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், பஞ்சாயத்து கட்டிடம், நீர்த்தேக்க தொட்டி ஆகிய 11 கட்டிடங்களை இடிப்பதற்கு ரூ.4 லட்சத்து 26 ஆயிரமும், கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் நடவடிக்கைகளுக்காக முககவசம், முழு கவச உடை மற்றும் கையுறை வாங்கிய வகைக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 743-ம் அனுமதிக்கப்பட்டது. கடலையூர், ஈராச்சி, கீழ ஈரால் மற்றும் வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு 3 மாத சம்பளம் ரூ.11 லட்சத்து 47 ஆயிரம் அனுமதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்