கோவில்பட்டி தற்காலிக சந்தையில், திங்கட்கிழமைகுலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு

கோவில்பட்டி தற்காலிக சந்தையில், திங்கட்கிழமை குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

Update: 2023-02-06 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எஸ்.பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி

யிருப்பதாவது:- கோவில்பட்டி நகராட்சியில் புதிதாக தினசரி சந்தை கட்டும் பணி மற்றும் தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து உதவி கலெக்டர் மகாலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கா.கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கூடுதல் பஸ்நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்ய குத்தகைதாரர்கள், வணிக சங்கப்பிரதிநிதிகள் ஆகியோருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. பின்னர் தற்காலிக சந்தையில் குலுக்கல் முறையில் கடை ஒதுக்கீடு செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்