கோவில்பட்டிஉதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டிஉதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2022-11-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் மாடசாமி, செயலாளர் சுதந்திரராஜன், மாவட்ட செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் அணி மோகன் தாஸ், பெரியதுரை, காளீஸ்வரன், பார்த்தீபன், பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முற்றுகை முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜூவை சந்தித்து, தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி மனு கொடுத்தார்.

அந்த மனுவில், கோவில்பட்டி- எட்டயபுரம் ரோடு சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார் வெண்கல சிலை தொடர்பாக கடந்த மாதம் 16-ம் தேதி தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தி தனி நபரிடம் இருந்து சிலையை மீட்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் நகலும் இணைத் துள்ளேன். வீரன் சுந்தரலிங்க தேவேந்திரனார் சிலை எனது கட்சிக்கும், கோவில்பட்டி வட்டார தேவேந்திரகுல மக்களுக்கும் பார்த்தியப்பட்டதாகும். இனிமேல் அனைத்து தேவேந்திர குல மக்கள் சார்பாக சங்கமே சிலை பராமரிப்பு செய்யும். சிலை சம்பந்தமாக அரசு அறிவிப்பு கொடுத்தால் எனக்கும், கோவில்பட்டி வட்டார தேவேந்திரகுல சங்கத்திற்கும் கொடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்