கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Update: 2022-11-28 20:17 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரிக்கு வருவார்கள். அருவியில் குளித்து, அணை அருேக உள்ள பொரித்த மீன்களை வாங்கி ருசித்து மகிழ்வார்கள்.

இந்தநிலையில் கோபி மற்றும் ெகாடிவேரி தடுப்பணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு வந்து சேர்ந்ததால் கொடிவேரி தடுப்பணை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க பொதுப்பணித்துறை தடைவிதித்துள்ளது. தண்ணீரின் வேகம் குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்