வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே தாணிக்கோட்டகம் கிராமத்தில் உள்ள கோடியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 21-ந் தேதி தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கோடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது பெண்கள் மாவிளக்கு போட்டு அம்மனை வேண்டி கொண்டனர். மேலும் பக்தர்கள் வாழைத்தார்களை கோவிலில் கட்டுதல், மண் குதிரைகள், மண் பொம்மைகளை கோவில் வளாகத்தில் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.