கோடி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு

கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update: 2023-05-05 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கோடியக்கரை கோடிமுத்து மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று முன்தினம் காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிந்து பூஜிக்கப்பட்ட கடங்களை மங்கள வாத்தியங்கள் மற்றும் கிராம வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலின் பிரதான கோபுரங்கள் மற்றும் மூலஸ்தான கோபுரத்திலும் புனித நீரூற்றி குடமுழுக்கு நடந்தது. பின்னர் மூலஸ்தானத்தில் உள்ள மாரியம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி பாலசுப்ரமணியன், திருப்பணி கமிட்டியாளர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்