தாராபுரம் பகுதியில் ஒரு மணிநேரம் மழை கொட்டித்தீர்த்தது. வெந்து தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடும் வெயில்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து கோடை வெயில் தாக்கம் 100 டிகிரியை தாண்டியுள்ளது.தாராபுரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் வரை வழக்கம்போல் வெயில் வெளுத்து வாங்கியது. அதைத் தொடர்ந்து வானில் கருமேகங்கள் ஒன்று கூடியதால் சூறாவளி காற்றுடன் 3மணிக்கு இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் பாய்ந்து ஓடியது. இதனால் தாராபுரம் வட்டார பகுதியான அலங்கியம், காளி பாளையம், சத்தரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் குளிர்ச்சி நிலவியது.
மகிழ்ச்சி
இதனால் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெயில் வாட்டி வதைத்த நிலையில் கோடை மழை சுமார் ஒரு நேரம் பெய்ததால் வெப்பம் குறைந்து, பூமி குளிர்ந்தது.