கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது

தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-03 11:17 GMT

தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த ரோசாரி மகன் மரிய அந்தோணி டைட்டஸ் (எ) பிச்சை டைட்டஸ் (25) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் மரிய அந்தோணி டைட்டஸை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி டைட்டஸ் மீது ஏற்கனவே வடபாகம், தென்பாகம், தெர்மல்நகர் மற்றும் சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்