கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம்

கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் நடந்தது.;

Update: 2023-08-01 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் இந்திரா காந்தி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் குகன், துணை தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்வேளூர் பஸ் நிறுத்தத்தில் போராட்டங்களுக்கு அனுமதி அளிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதால், மாற்று இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பு ஊதியம் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சித்ரகலா, பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்