அலங்காநல்லூர் அருகே கோவில் காளை சாவு-கிராம மக்கள் அஞ்சலி

அலங்காநல்லூர் அருகே கோவில் காளை சாவு-கிராம மக்கள் அஞ்சலி

Update: 2022-11-30 20:07 GMT

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கோவில் காளை உடல்நல குறைவால் இறந்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்று ஊருக்கு புகழை சேர்த்துள்ளது. கோவில்காளை திடீரென இறந்த தகவலறிந்த சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்களும், மாடுபிடி வீரர்களும், வருகைதந்து காளைக்கு மாலை, வேட்டி துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்மந்தையில் காளையை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்