கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு

கோத்தகிரி மாரியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு நடந்தது.

Update: 2023-10-18 19:15 GMT


நவராத்திரி விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதையொட்டி கோத்தகிரியில் உள்ள கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு தொடங்கியது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கொலு பொம்மைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதே போல் கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று 4 வது நாள் சிறப்பு பூஜை நடைபெற்றது. நவராத்திரி பூஜையையொட்டி தினமும் 9 சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்றும் மாங்கல்ய பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதே போல் கோத்தகிரி பகுதியில் உள்ள பல கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. வருகிற 23- ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24-ந் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி தனியார் பள்ளிகளிலும், வீடுகளிலும் பலர் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்