வாலிபரை கொலை செய்த2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சின்னமனூரில் வாலிபரை கொலை செய்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
சின்னமனூரை சேர்ந்தவர் ஒண்டி என்ற ஒல்லிக்குச்சி (வயது 26). கடந்த ஜூலை மாதம் இவரது தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இ்டையே செல்போன் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் சின்னமனூரை சேர்ந்த வினோத்குமார் என்ற வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து ஒண்டி, மாதவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஒண்டி என்ற ஒண்டி, மாதவன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குபடி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். அதன்பேரில் 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.