மின்னல் தாக்கி பலியானதொழிலாளி குடும்பத்துக்குகடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல்

மின்னல் தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.

Update: 2023-05-31 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறில் சாலிவாகனர் தெருவைச் சேர்ந்த சிவன் வேளாளர் மகன் சுப்பையா. செங்கல் சூளை தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அவரது வீட்டுக்கு ெசன்று, தாய், தந்தை மற்றும் மனைவி மாரியம்மாள் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார்.அப்போது அவரது மனைவி குடியிருக்க வீடு கிடையாது, உதவிக்கு ஆட்கள் இல்லை. அவருக்கு அரசு உதவி கிடைக்க மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ. பரிந்துரை செய்தார். அப்போது அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செ.செல்வகுமார், அ.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகணேசன், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் தங்கப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், கோவில்பட்டி காந்தி நகர் அனுக்கை விநாயகர், காளியம்மன், கருப்பசாமி கோவில் வைகாசி கொடை விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 100 மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார். 10-ம் வகுப்பு தேர்வில் 454 மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு படிப்பு செலவுக்கு ரூ.5,700 கல்வி உதவித்தொகையாக அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், வார்டு செயலாளர் சிங்கராஜ், ஆவின் தலைவர் தாமோதரன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாத்துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை 16- வது வார்டு செயலாளர் ரமேஷ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்