நாயை கொன்று குடிநீர் தொட்டியில் வீசிய சம்பவத்தில் வாலிபர் கைது

சிவகாசி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில், நாயை கொன்று வீசிய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-07 19:07 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில், நாயை கொன்று வீசிய சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில், பிள்ளையார்கோவில் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நாய் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. பின்னர் நாயின் உடலை அகற்றி, மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து தலைவி காளீஸ்வரி, எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வாலிபரை போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

விசாரணையில் அந்த வாலிபருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை விடுவித்தனர். அவர் கொடுத்த சில தகவல்கள் அடிப்படையில் தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நாயின் உடலை வீசிய சம்பவம் தொடர்பாக அதேபகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 22) என்பவரை கைது செய்தனர். மேலும் இ்ந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்