சிறுமி கடத்தல்

புதுப்பேட்டை அருகே சிறுமி கடத்தல் வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-04-26 18:45 GMT

புதுப்பேட்டை

புதுப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்துவிட்டு விடுமுறை நாட்களில் கடலூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணாததால் இது குறித்து புதுப்பேட்டைபோலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம்(வயது 24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்ற ஆறுமுகத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்