கீரம்பூர் குறிச்சி மலையில் ராட்சத பாறைகள் வெட்டி கடத்தல்

கீரம்பூர் குறிச்சி மலையில் ராட்சத பாறைகள் வெட்டி கடத்தப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-16 19:45 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் குறிச்சி மலைக்கிராமம் அமைந்துள்ளது. தரைமட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கீரம்பூர் குறிச்சி மலையில் ராட்சத பாறைகள் மற்றும் அரியவகை மூலிகை செடிகள் உள்ளன. இந்தநிலையில் இங்குள்ள ராட்சத பாறைகளை சிலர் உளி மற்றும் சுத்தியலால் உடைத்து சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ராட்சத பாறைகளை சிலர் வெட்டி கடத்தி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. எனவே பாறைகளை வெட்டி கடத்தும் மர்ம ஆசாமிகள் மீது கனிம வள அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்