திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்; வாலிபர் கைது
சிவகிரி அருகே திருமண ஆசை காட்டி சிறுமியை கடத்தியதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் கணேசன் (வயது 20). கூலி தொழிலாளியான இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.