மதுரையில் இருந்து காரில் கடத்தல்; சென்னையை சேர்ந்தவர் அதிரடி மீட்பு - 4 பேர் கைது

மதுரையில் இருந்து காரில் கடத்தப்பட்ட சென்னையை ேசர்ந்தவர் 48 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-19 20:31 GMT


மதுரையில் இருந்து காரில் கடத்தப்பட்ட சென்னையை ேசர்ந்தவர் 48 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்தவர் கடத்தல்

சென்னையை சேர்ந்தவர் முருகன். இவர் மதுரை மாட்டுத்தாவணி எதிரே உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தார். இவரது உறவினர் நெல்லை மாவட்டம், முக்கூடலை சேர்ந்த முப்பிடாதி மனைவி காளீஸ்வரி.

இவர் தனது மாமா முருகனை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் எதிரே உள்ள விடுதிக்கு சென்று சந்தித்தார். பின்னர் இருவரும் வெளியே வந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது.

மேலும் அந்த கும்பல் காளீஸ்வரியை கீழே பிடித்து தள்ளி விட்டு முருகனை காரில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் குறித்து காளீஸ்வரி புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடத்தல் கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைத்தனர். இந்த தனிப்படை போலீசார் கடத்தல் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர்.

4 பேர் கைது

இதில் சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடத்தல் கும்பல் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அது ஆனந்த் என்பவரது வீடு என்பது தெரியவந்தது. பின்னர் அந்த வீட்டில் முருகனை போலீசார் மீட்டனர். மேலும் அங்கிருந்த மணி, ஆனந்த், சுரேஷ்குமார், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரும் முருகனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க அவரை கடத்திச் சென்றதாக தெரிவித்தனர்.

சம்பவம் நடந்து 48 மணிநேரத்தில் கடத்தல் கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை மதுரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்