பள்ளி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

பள்ளி மாணவி கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-06 18:14 GMT

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி தென்னகரையை சேர்ந்தவர் நீலாவதி மகள் பிரியதர்ஷினி(வயது 18). இவர் ஆர்.டி.மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் பிரியதர்ஷினி கிடைக்காததால் இதுகுறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்