3 வயது மகளுடன் பெண் கடத்தலா? போலீசார் விசாரணை

3 வயது மகளுடன் பெண் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-06 18:14 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 51). இவரது மகள் புவனேஸ்வரி (23). இவருக்கு சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமாகி யகிழினி (3) என்ற மகள் உள்ளார். இந்தநிலையில் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு மகளுடன் புவனேஸ்வரி வந்திருந்தார். வீட்டில் இருந்த தாய்-மகளை திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை. இதுகுறித்து ராஜேந்திரன் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய்-மகளை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்