மொபட்டில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மொபட்டில் கடத்தப்பட்ட 150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-08-18 22:19 GMT

தாளவாடி

தாளவாடியை அடுத்த தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் சு.தர்மராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் மூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தார். உடனே அதிகாரிகள் அந்த மொபட்டை தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும் அந்த நபர் மொபட்டை அப்படியே நிறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

உடனே அதிகாரிகள் மொபட்டில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 150 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மொபட்டில் வந்த நபர், ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் ெமாபட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டில் ரேஷன் அரிசியை கடத்தியவர் யார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்