கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் மினி வேனில் கடத்திய 45 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-08-09 13:10 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு போலீசார் நேற்று பசுவந்தனை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தும், மினி வேனை நிறுத்தி விட்டு, அதிலிருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பியோடி விட்டனர். அந்த வேனை போலீசார் சோதனை நடத்தினர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 45 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்தது. மினி வேனுடன் ரேஷன்அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த ரேஷன் அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மினி வேனில் இருந்து தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்