சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

கே.வி.குப்பம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-06 17:16 GMT

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரின் மகன் கவுதம் (வயது 22). இவர் கடந்த 1-ந் தேதி தேவரிஷி குப்பத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று அந்த சிறுமி ஊருக்குத் திரும்பி வந்தார். அவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமியை கடத்தி சென்ற கவுதமை இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்