சிறுமியை கடத்திய வாலிபர் கைது

சின்னசேலம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-19 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், அதை பகுதியை சேர்ந்த ராஜி(27) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அம்மையகரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ராஜியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்