பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவி கடத்தல்

Update: 2022-12-19 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்