ஓசூரில் ஐ.டி.ஐ. மாணவி கடத்தல்?: வாலிபர் மீது புகார்

Update: 2022-09-24 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஐ.டி.ஐ. ஒன்றில் படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், பின்னர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில் ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த ஹரி (வயது 22) என்ற வாலிபர் தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்