ஆட்சாளம்மன் கோவிலில் கேடக திருவிழா

ஆலத்தூர் ஆட்சாளம்மன் கோவிலில் கேடக திருவிழா நடந்தது

Update: 2022-07-09 18:42 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரில் ஆட்சாளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கேடக திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் விழாவாக நேற்று இரவு விழிதியூர், அருள்மொழிதேவன் கோவில் சூலபிடாரி அம்மன், ஏகரி அம்மன், ஆலத்தூர் ஆட்சாளம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு மாவிளக்கு பூஜை, கஞ்சி வார்த்தல், அன்னதானம், பால், பன்னீர், இளநீர், சந்தனம், குங்குமம், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி வீதி உலா இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்