நகை பறிப்பு வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கேரள வாலிபர்

போடியில் நகை பறிப்பு வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு கேரள வாலிபர் சிக்கினார்.

Update: 2023-04-03 20:30 GMT

போடி திருவள்ளுவர் சிலை அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தவர் சீதாலட்சுமி (வயது 65). கடந்த 2018-ம் ஆண்டு இவரிடம், 2 மர்மநபர்கள் பொருட்கள் வாங்குவது போல் நடித்து சீதாலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துச்சென்றனர். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர். அதில், ஒருவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுப்புழா ஊரமனை பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரெதிஷ்குமார் (30) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் தனது சொந்த ஊரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி உத்தரவின்பேரில் போலீஸ் தனிப்படையினர் கேரளாவுக்கு சென்று, வீட்டில் பதுங்கியிருந்த ரெதிஷ்குமாரை கைது செய்தனர். நகை பறிப்பு சம்பவம் நடந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்