கோழிகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் குமரி எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கோழிகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-10 20:28 GMT

களியக்காவிளை:

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் குமரி எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு கோழிகளை ஏற்றி வந்த கேரள வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும், வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பறவை காய்ச்சல்

கேரளாவில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கோட்டயம் பகுதியில் தோன்றிய பறவை காய்ச்சல் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பரவியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட கோழி, வாத்து, பறவைகள் அதிக அளவில் இறந்தன. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதிக அளவில் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் வைரஸ் உருமாற்றம் அடைந்து மனிதர்களுக்கு பரவ கூடும் என்று அச்சம் நிலவுவதால் கேரள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டைகள் எடுத்து வர கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக குமரி-கேரள எல்லை பகுதியான படந்தாலுமூடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு காண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள் ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறையினர் படந்தாலுமூடு பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்