பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம்:தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்

பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.

Update: 2023-03-11 21:10 GMT

அருமனை:

பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர்.

மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்

அருமனை அருகே உள்ள மேல்புறம் வட்டவிளையை சேர்ந்த 35 வயது பெண், கணவர் இறந்து விட்டதால் தாயாருடன் வசித்து வருகிறார். மேல்புறம் சந்திப்பு வழியாக அந்த பெண் செல்லும் போதெல்லாம் அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்வது வழக்கம். அதே போல் கடந்த 9-ந்தேதி அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் கேலி-கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் வீட்டில் இருந்து கம்பு மற்றும் வெட்டு கத்தியை எடுத்து வந்து தாக்க முயன்றதால், ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இது சமூகவலைதளத்தில் பரவியதால், அருமனை போலீசார் விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்புறத்தை சேர்ந்த சசி, வினோத், பாகோடு பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கேரளா விரைந்தது

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள டெம்போ டிரைவர் பிபின், ஆட்டோ டிரைவர் அரவிந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்யக்கோரி பெண்கள் அமைப்பு மற்றும் மகளிர் ஆணையம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.

அதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிபின், அரவிந்த் ஆகியோரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் தலைமறைவாக உள்ள 2 பேரும் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்