கேரளா குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய உளவுத்துறை அறிவுறுத்தல்

ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-31 00:55 GMT

சென்னை,

கேரளாவில் மத கூட்டரங்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை ஆணையர் மற்றும் ரெயில்வே ஏ.டி.ஜி.பி., ஐ.ஜி., டி.ஐ.ஜி. உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் தொடர்புடைய இடங்கள், தூதரகங்கள், சுற்றுலா தளங்கள் ஆகிய இடங்களை தீவிரமாக கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்