செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைப்பது தி.மு.க.வுக்கு நல்லது

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைப்பது தி.மு.க.வுக்கு நல்லது என முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-06-14 18:45 GMT

நாகர்கோவில்:

செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைப்பது தி.மு.க.வுக்கு நல்லது என முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். இது யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொருந்தும். தான் தூய்மையானவர் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. செந்தில்பாலாஜி தூய்மையானவர் என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து அவர் விலகி இருக்க வேண்டும்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும் நல்லது. இது 2015-ம் ஆண்டில் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்கள். அதே மனிதர் தி.மு.க.வுக்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா?

மத்திய அரசு நடவடிக்கை

தி.மு.க. அவரை ஊழல் நிறைந்த சாக்கடை என கூறியது. தற்போது கங்கை போல் கூறுகிறார்கள். தி.மு.க. அரசு அவருக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல். செந்தில் பாலாஜிக்கு உண்மையாக இருதய பிரச்சினை தானா?. இதை விட கேவலமான விஷயம் வேறில்லை.

இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத்திய அரசாங்கம் நேர்மையாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்