காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைபள்ளி மைதானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலை பள்ளி மைதானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியில் சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளிக்கு சொந்தமான மைதானத்தில் தனியார், ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில், வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை அளவீடு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இப்பணியில் திருச்செந்தூர் துணை தாசில்தார்கள் தங்கமாரி, சங்கரநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா உள்ளிட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர். அப்போது திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இந்து சூடன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.