காயல்பட்டினம்அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு பயிற்சி முகாம்

காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் தீ தடுப்பு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-02-15 18:45 GMT

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமில் திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் ராஜமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பயிற்சி அளித்தனர். செயல்முறை விளக்கங்களும் அளித்தனர். நிகழ்ச்சியில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை டாக்டர் கோகிலா மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்