காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

Update: 2023-04-21 18:45 GMT

திருச்செந்தூர்:

காயல்பட்டினம் கடற்கரையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கெண்டனர்.

சிறப்பு தொழுகை

காயல்பட்டினம் அல்காமி உல் அஸ்ஹர் ஜூம்மா மஸ்ஜித், இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் ஆகியவை இணைந்து நடத்திய ரம்ஜான் சிறப்பு தொழுகை காயல்பட்டினம் கடற்கரையில் நேற்று காலையில் நடந்தது.

இதில், அஸ்ஹர் கதீப், அப்துல் மஜீது ஆகியோர் குத்பா பேருரையாற்றினர். இமாம் நெய்னா முகம்மது தொழுகை நடத்தினார்.

திரளான முஸ்லிம்கள்

இந்த தொழுகையில் அஸ்ஹர் நிர்வாகத்தின் தலைவர் அபுல்ஹசன் கலாமி, துணை தலைவர் நவாஸ் அகமது, லெப்பை தம்பி, செயலாளர் உமர், துணை செயலாளர் கரூர் செய்யது முகமது உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்