ஏரிகுத்தி கிராமத்தில் பக்தர்கள் காவடி ஊர்வலம்
ஆடிக்கிருத்திகையையொட்டி ஏரிகுத்தி கிராமத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்தவாறு கைலாசகிரி மலை கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பேரணாம்பட்டு
ஆடிக்கிருத்திகையையொட்டி ஏரிகுத்தி கிராமத்திலிருந்து பக்தர்கள் காவடி எடுத்தவாறு கைலாசகிரி மலை கோவிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரி குத்தி கிராமத்திலிருந்து கைலாசகிரி மலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனாக மலர் காவடி எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
அவர்கள் பேரணாம்பட்டு டவுன் சின்ன மஜித் தெரு வழியாக 5 மஜித்துகளை கடந்து பஜார் வீதி, நான்கு கம்பம் வழியாக பஸ் நிலையத்தை அடைந்தனர். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் கைலாசகிரிக்கு புறப்பட்டு சென்றனர். காவடி ஊர்வலத்தில் அமலு விஜயன் எம்.எல்.ஏ., பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் பலர் கலந்து கொண்டனர்.
காவடி ஊர்வலத்தை முன்னிட்டு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.