ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
ஆலிச்சிக்குடி சுப்பிரமணியர் கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் வந்தனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடியில் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 79-வது ஆண்டு காவடி திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை பக்தர்கள் விருத்தாசலம் மணிமுக்தாறுக்கு சென்று, அங்கு சக்தி கரகம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, பக்தர்கள் காவடி எடுத்தும், செடல் குத்தியும், பாலகுடம் எடுத்தும் ஊர்வலமாக, சுப்பிரமணியர் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து விநாயகர், பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மகா தீபாரதனை நடக்க சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியர் பக்ததர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.