காட்டுமன்னார்கோவில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

காட்டுமன்னார்கோவில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எாிந்து சேதமானது.

Update: 2022-10-14 18:45 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 49). இவர் காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலை நான்குமுனை சந்திப்பில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். பராமரிப்பு பணி காரணமாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் சாகுல்ஹமீது கடையில் பணியாற்றிய ஊழியர்கள் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு கொடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். காலை 10.30 மணியளவில் ஜெனரேட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் இதுபற்றி காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர் உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்