காட்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம்
காட்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் வள்ளிமலையில் நடந்தது.
திருவலம்
காட்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயற்குழு கூட்டம் வள்ளிமலையில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் வில்வநாதன் தலைமை தாங்கினார். காட்பாடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.ராஜேந்திரன், காட்பாடி ஒன்றியக் குழு தலைவர் வி.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை வரும் 3-ந் தேதி அந்தந்த கிளைகளில் தி.மு.க. கொடி ஏற்றி, கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, சிறப்பாக கொண்டாடுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.