கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில்சித்திரை திருவோணம்
கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் சித்திரை திருவோணம் சிறப்பு பூஜை நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரஹ ஸ்தலமான சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோவிலில் சித்திரை திருவோணம் நடராஜர் அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 9 மணிமுதல் அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினரின் திருமுறை பாராயணம் நடந்தது. காலை 9 மணிமுதல் ஹோமம், காலை 10 மணிமுதல் அபிஷேகம், தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.